தேவேந்திர குல வேளாளா்களின் வரலாறு
மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]
- தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
- குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
- பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
- பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
- மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
- காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
- காலாடி, சீர்மரபினர் (எண் 28)
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
No comments:
Post a Comment